ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் படம் வெளிவருகிறது என்றால் தமிழ் சினிமாவில் வேறு படங்களை ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஏப்ரல் 27ம் தேதி வெளியிடலாம் எனத் திட்டமிடப்பட்டிருந்த சில படங்கள் தற்போது வேறு ரிலீஸ் தேதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தெலுங்கு சினிமாவில் காலா படத்திற்காக அவர்கள் பயந்து ஒதுங்குவதாக இல்லை. கபாலி படம் தெலுங்கில் டப்பிங் ஆகி பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற தைரியம் தான் அதற்குக் காரணம்.
ஏப்ரல் 27ம் தேதி தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் பரத் அனி நேனு, அல்லு அர்ஜுன் நடிக்கும் நா பேரு சூர்யா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதே தேதியில் காலா வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், அவர்களது தேதியை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. பட வெளியீடு பற்றி எப்போதோ அறிவித்துவிட்டோம். அதை இனி மாற்ற முடியாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.
இதனால், காலா படம் தெலுங்கில் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் இருவருக்குமே தெலுங்குத் திரையுலகில் ரஜினிகாந்தை விட பல மடங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டியை சமாளித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தற்போது காலா படம் உள்ளது.