'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளத்தில் 'பூமரம்' என்கிற படத்தில் அறிமுகமாக இருக்கிறார். சோதனை என்னவென்றால் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகப்படமாக நடித்த 'ஒருபக்க கதை' படத்தை போலவே இந்த பூமரம் படமும் எல்லா வேலைகளும் முடிந்து கடந்த 2016 இறுதியிலேயே வெளியாகும் என சொல்லப்பட்டாலும் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.
இத்தனைக்கும் இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைன், நிவின்பாலியை வைத்து தொடர்ந்து இரண்டு நூறுநாள் ஹிட் படங்களை கொடுத்தவர். எப்படியோ ஒருவழியாக 'பூமரம்' வரும் மார்ச்-9ஆம் தேதி ரிலீஸாகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.. இந்த தேதியும் தள்ளிப்போகாமல் இருந்தால் சரிதான்.