பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெண்களுக்கு பயன்படும் நேப்கினை குறைந்த விலைக்கு தயாரித்து கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள பாலிவுட் படம் பேட் மேன். அக்ஷ்ய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். கடந்த 9ந் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தை பாகிஸ்தானில் வெளியிட அந்த நாட்டின் தணிக்கை வாரியம் தடைவிதித்திருக்கிறது. படத்தை தணிக்கை குழுவினர் பார்த்தனர். பின்னர் அது குறித்து குழுவின் தலைவர் இஷாக் அகமது நிருபர்களிடம் கூறியதாவது: பெண்கள் பயன்படுத்தும் அந்தரங்க பொருளை வியாபாரமாக்குவதும், அது பற்றி ஆண்கள் விரிவாக பேசுவதும் எங்கள் நாட்டு கலாச்சாரத்திற்கு எதிரானது. எனவே படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.