பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலி படத்திற்கு ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. தனுஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் வாழ்க்கை பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. காலா வருகிற ஏப்., 27-ம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதனால் பின்னணி இசை, எடிட்டிங் உள்ளிட்ட மற்ற பணிகள் தீவிரமாய் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காலா படத்தில் ரஜினி சண்டை போடும் காட்சிகள் இணையதளங்களில் லீக்காகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடிட்டிங் பணியின் போது தான் இந்த காட்சிகள் லீக்காகி இருக்கின்றன. இதனால் அங்கு இருப்பவர்கள் யாரோ தான் இதை வெளியிட்டிருக்க கூடும் என தெரிகிறது.