Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சமந்தாவுக்குக் குவியும் பாராட்டுக்கள்

11 பிப், 2018 - 13:47 IST
எழுத்தின் அளவு:
samantha-get-good-response-for-rangasthalam-teaser

ஒரு 28 வினாடி டீசர் ஒரு நாயகிக்கு இவ்வளவு பாராட்டுக்களைப் பெற்றுத் தருமா ? என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சமந்தா. அவர் தெலுங்கில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ள படம் 'ரங்கஸ்தலம்'. இப்படத்தின் முதல் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த டீசரில் படத்தின் நாயகனான ராம் சரண் தேஜா மட்டுமே இடம் பெற்றிருந்தார். படத்தின் நாயகி சமந்தா துளி கூட இடம் பெறவில்லை என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால், சமந்தாவிற்கென தனி டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து அந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு சமந்தா மட்டுமே இடம் பெறும் 28 வினாடி டீசர் ஒன்றை வெளியிட்டார்கள். அந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில், யு டியுப், பேஸ்புக் இரண்டிலும் 70 லட்சம் பார்வைகளைப் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் இது வரை படத்தின் நாயகிக்கு என்று யாரும் டீசர் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சமந்தா இடம் பெற்றுள்ள 'ரங்கஸ்தலம்' டீசரில் அவருடைய 'ராமலட்சுமி' கிராமத்துப் பெண் தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இடுப்பில் குடத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது, டீசல் கேனைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது, தலையில் சோளக் கட்டுடன், கையில் தூக்கு சட்டியுடன் நடந்து போவது, ஆற்றங்கரையில் துணி துவைப்பது என ஒவ்வொன்றிலும் அவருடைய நடிப்பு அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.


சமந்தாவின் ராமலட்சுமி கதாபாத்திரம் 'ரங்கஸ்தலம்' படம் வருவதற்கு முன்பே டீசரிலேயே பல பிரபலங்கள், ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in