ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நிவின்பாலி, த்ரிஷா நடிப்பில் மலையாளத்தில் 'ஹே ஜூடு' என்கிற படம் வெளியானது. புத்திசாலியான ஆனால் ஒரு சராசரி மனிதனின் குணாதிசயங்கள் குறைவான ஒரு கதாபாத்திரத்தில் படம் முழுதும் நடித்து ஆச்சர்யப்படுத்தினார் நிவின்பாலி.
இந்தப்படத்தை பார்த்த நடிகர் பிருத்விராஜ், “நிவின்பாலியின் திறமையுடன் ஒப்பிட்டால் இதையெல்லாம் அவர் சுலபமாக செய்துவிட்டு போகிறவர் தான். படம் முழுதும் தனது கேரக்டரை அவர் தூக்கி சுமந்த விதம் ரொம்பவே அழகானது” என நிவின்பாலியை பாராட்டியுள்ளார்
இந்தப்படத்தை இயக்கியுள்ள ஷ்யாம் பிரசாத்தின் இயக்கத்தில் தான் நிவின்பாலியும் பிருத்விராஜூம் ஏற்கனவே 'இவிடே' என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதுமட்டுமல்ல 'ஹே ஜூடு' படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான நிர்மல் சகாதேவ் தான் தற்போது பிருத்விராஜை வைத்து 'ரணம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.