மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், ஹிந்தியை தொடர்ந்து "தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்" என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார் நடிகர் தனுஷ். கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இப்படத்தை இயக்கி உள்ளார். பிரெஞ்ச் நாவலை தழுவி படம் உருவாகி உள்ளது.
நீண்டநாள் தயாரிப்பிலிருந்து பகிர் படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில், அஜதாசத்ரு லாவாஷ் படேல் என்ற ரோலில் தனுஷ் நடிக்கிறார். மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயண அனுபவங்கள் படத்தின் கதை என டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது.
பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்தியாவிலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.