Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியது என்ன?

10 பிப், 2018 - 10:16 IST
எழுத்தின் அளவு:
What-Rajini-disucss-with-his-fans-association-members?

ரஜினி தீவிர அரசியலில் குதிப்பதற்கு தயாராகி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து அவர்களை திருப்திபடுத்திவிட்டார். அவரது ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுவிட்டது. பாபா முத்திரை லோகோ சில மாற்றங்களுடன் மன்ற லோகோவாக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மாவட்டம் தோறும் சென்று மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மாவட்ட நிர்வாகிகளை ரஜினியின் அனுமதியோடு நியமித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். மாநில நிர்வாகிகள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் ரஜினி.

"தேர்தல் வரும்வரை அமைதியாக பணியாற்ற வேண்டும். யாரையும் தாக்கியோ, அல்லது என்னை புகழ்ந்தோ சுவரொட்டி ஒட்டக் கூடாது. மன்ற நடவடிக்கை குறித்து மீடியாக்களிடம் பேசக்கூடாது. அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. மக்களின் நம்பிக்கையை பெறுவது ஆகியவைதான் இப்போதைக்கு முக்கியம். குறிப்பாக படித்த இளைஞர்களை சேர்க்க வேண்டும். பதவி ஆசையுடன் பணியாற்றக்கூடாது" என்று ரஜினி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

Advertisement
நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம்நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் ... நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா


வாசகர் கருத்து (2)

Murugan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப், 2018 - 14:28 Report Abuse
Murugan Dear Mr. Rajini, Please be requested to avoid announcing/adding of your upcoming film news, whenever you reveal the status of your political news. This unnecessarily s doubt that you are using your political stand for advertising about your films.
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
10 பிப், 2018 - 11:39 Report Abuse
Shanu முதலில் இவர் வீட்டில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். அரசு கட்டிடத்தை குறைந்த வாடகைக்கு அதாவது 3100 ரூபாய்க்கு 20 வருடங்கள் கொடுத்தது, இந்த சிஸ்டம் சரி இல்லை. கோடி கோடியாக சம்பாதிக்கும் இவர், அரசு இடத்தை வேறு யாரவது வாடகைக்கு எடுத்து பிழைத்து கொள்ள விட்டு இருக்க வேண்டும். எல்லா துறையிலும் பணத்தை சம்பாதிக்க நினைப்பது. இவர் சரியாக வரி காட்டுகிறாரா? இவரது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்க முடியாதா? ரசிகர்களை சந்திக்கும் போது கை கொடுக்க கூடாது, நெருங்கி வர கூடாது என்று சொல்லி சட்டம் போடுகிறவர் பால் அபிஷேகம் செய்ய கூடாது என்று சொல்ல கூடாதா? திரை அரங்குகளில் எனது படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்க கூடாது என்று சொல்ல முடியாதா? இவர் வந்து சிஸ்டம் பத்தி பேசுகிறார். இவர் சொல்வதை கேட்க தமிழர்கள் என்ன முட்டாள்களா? இவரது ஒரே நம்பிக்கை, பிஜேபியிடம் கூட்டு வைத்தால், கள்ள ஓட்டை போட வைத்து ஜெயிக்க வைத்து விடுவார்கள் என்பது மட்டும் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in