இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்பைடர் நாயகி ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழில் சூர்யா நடிக்கும் 36வது படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இதையடுத்து கார்த்தியுடன் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், ஹிந்தியில் அய்யாரி படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
ஹிந்திக்கு சென்றபிறகு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வரும் ரகுல் பிரீத் சிங், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வருங்கால கணவர் பற்றி கூறியிருக்கிறார். அதாவது, மிகப்பெரிய மல்டி மில்லியனராக இருக்க வேண்டும், அயல்நாட்டுக்காரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்படவில்லை. நல்ல மனிதராக இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதனால் எனது வருங்கால கணவர், கண்டிப்பாக 6 அடி உயரம் இருக்க வேண்டும். இந்த மாதிரி ஆண் மகனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.