Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா, அனுஷ்கா யார் நம்பர் 1?

08 பிப், 2018 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Anushka---Nayanthara-who-is-No-1?

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கைவசம் வைத்திருக்கும் படங்களிலும் சரி, அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகியும், பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததைக் காட்டிலும், நாயகிக்கான முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து சமீபகாலமாக மேலும் பேசப்படுகிறார்.

அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'அறம்' படம் விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்பட்ட படமாக அமைந்தது. ஹீரோக்களே நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார் என பலரும் பாராட்டினார்கள். 'அறம்' படம் வசூலில் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை என்றாலும் தரமான படம் எனப் பாராட்டப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் 30 வயதைக் கடந்த நயன்தாரா சாதித்துக் கொண்டிருக்கிறார் என்றால் தெலுங்குத் திரையுலகில் அதே 30 வயதைக் கடந்த அனுஷ்காவும் சாதித்துக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பாகமதி' படம் சுமார் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தெலுங்கத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களே தோல்வியைத் தழுவிய நிலையில் அனுஷ்காவின் படம் லாபத்தைக் கொடுத்துள்ளது.

நயன்தாரா, அனுஷ்கா இருவருமே பல தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளனர். தற்போதைக்கு தென்னிந்திய நடிகைகளில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி. ஆனால், இருவரது பயணமும் வேறு வேறு தளத்தில் உள்ளது. அனுஷ்காவுக்கு முன்பாகவே பேய்ப் படங்களில் நடித்து வெற்றி பெற்ற நயன்தாரா அடுத்தும் சில த்ரில்லர் படங்களில் நடிக்க உள்ளார்.

நயன்தாரா கைவசம் பல படங்கள் உள்ளது, அதே சமயம் அனுஷ்கா கைவசம் புதுப் படங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் 'பாகமதி' வெற்றியையும், வசூலையும் பொறுத்தவரையில் இந்த 2018ம் ஆண்டை அனுஷ்கா அமர்க்களமாகவே ஆரம்பித்துள்ளார். வாய்ப்புகள் விஷயத்தில் அஜித்துடன் 'விஸ்வாசம்' படம், கமலுடன் 'இந்தியன் 2' படம் என நயன்தாரா முன்னணியில் இருக்கிறார்.

வேறு எந்த இளம் நடிகைகளும் இவர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இவர்கள் இருவரும்தான் இப்போதைக்கு நம்பர் 1 இடத்திற்குப் போட்டியில் இருக்கிறார்கள் என்பது உண்மை.

Advertisement
செல்வராகவன் மாறவேயில்லை - யுவன்ஷங்கர் ராஜாசெல்வராகவன் மாறவேயில்லை - ... தமிழகத்திற்கு சுயமின்சாரம் : அமெரிக்காவில் விஞ்ஞானியுடன் கமல் ஆலோசனை தமிழகத்திற்கு சுயமின்சாரம் : ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in