600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். இந்த படத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அந்த வகையில், பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களுக்குப்பிறகு நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார் நயன்தாரா.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பிறகு வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது டி.இமான் இசையமைப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் பாடல் கம்போஸிங் வேலைகளை தொடங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.