இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீசாக மம்முட்டி நடித்த 'மாஸ்டர்பீஸ்'' படம் வெளியானது. சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படும் இந்தப்படம் வெளியாகி 5௦ நாட்களை கடந்த நிலையில் இந்தப்படத்தை தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறதாம் இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்..
மம்முட்டி தவிர வரலட்சுமி, மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா, பாகமதி ஹீரோ உன்னிமுகுந்தன் என தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இதில் நிறைய இருப்பதாலும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் என்பதால் ரசிகர்களை எளிதில் கவரும் என்பதாலும் இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யா இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம் கடந்த ஜன-26ஆம் தேதி மம்முட்டியின் சொந்த தயாரிப்பில் அவர் தயாரித்து நடித்திருந்த 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி இருந்தாலும் தமிழ் நட்சத்திரங்கள் நிறைய நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் மட்டுமே வெளியானது.
அதனால் 'ஸ்ட்ரீட்லைஸ்' படம் வெளியாகாமல் உள்ள நிலையில் 'மாஸ்டர்பீஸ் படத்தை தமிழில் வெளியிடுவது மலையாள திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.