தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரகுமானை கதையின் நாயகனாக வைத்து சிலர் படங்களை இயக்கி வருகின்றனர்.. அப்படி உருவாகி வரும் ஒரு படம் தான் ஆபரேஷன் அரபைமா'. இயக்குனர் ப்ரஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
அமேசான் ஆற்றில் வாழும் குறிப்பாக நன்னீரில் மட்டுமே வாழும் ஒரு மீன் வகைதான் 'அரபைமா'. இந்த மீன் தன்னிடம் அன்பாக பழகுபவர்களுக்கு நண்பன் என்றும் தன்னிடம் கடுமை காட்டினால் அதுவும் தனது கடுமையான முகம் காட்டக்கூடிய விசித்திர மீன் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தின் நாயகன் ரகுமானும் இதேபோன்ற குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் மலையாள குணச்சித்திர நடிகரான டினி டாம் என்பவர் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.