ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமா நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி (சிசிஎல்) போன்று, சினிமா நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விளையாடும் பாட்மின்டன் போட்டிகள் (சிபிஎல்) கடந்து ஆண்டு தொடங்கியது. மலேசியாவில் நடந்த இந்தப் போட்டியில் தெலுங்கு அணி முதல் இடத்தையும், கேரளா அணி 2வது இடத்தையும் பிடித்தது.
இதன் 2வது சீசன் வருகிற 25ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் சென்னை ராக்கர்ஸ், கேரளா ராயல்ஸ், டோலிவுட் தண்டர், கர்நாடகா வாரியர்ஸ் அணிகள் விளையாடுகிறது. இதில் அந்தந்த மாநில மொழி நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த போட்டியில் அமலாபால் நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு விளையாடிவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். கூடுதலாக சிலரும் சேர்ந்திருக்கிறார்கள். விளையாடும் நடிகர், நடிகைகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.