சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகர் சல்மான் கான், தன் தங்கையின் கணவர் ஆயுஷ் சர்மாவுக்காக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு லவ்ராத்திரி என்று பெயரிட்டுள்ளனர். அபிராஜ் மினாவாலா இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோயினாக வாரினா ஹூசைன் என்ற நடிகை அறிமுகமாகிறார்.
இதுகுறித்து சல்மான் கான் தன் டுவிட்டரில், இறுதியாக நான் ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டேன். அவர் தான் வாரினா ஹூசைன். இவர் தான் லவ்ராத்திரி படத்தின் ஹீரோயின் என்று கூறியுள்ளார்.
மாடலிங்கான வாரினா, ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். லவ் ராத்திரியில் ஆயுஸ் சர்மா குஜராத்தி பையனாகவும், வாரினா பேலட் டான்ஸராகவும் நடிக்கின்றனர். இப்படம் காதல் கதையில் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.