ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் 'பேரன்பு'. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது சிறந்த ஆசிய படத்துக்கு வழங்கப்படும் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட 187 உலக திரைப்படங்களிலிருந்து 'பேரன்பு'க்கு 20வது இடம் கிடைத்தது.
ஆனால் சுமார் 23 வருடங்களுக்கு முன்பே மம்முட்டி படம் இதேபோல ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் மம்முட்டி நடித்த விதேயன் படத்துக்குத்தான் இந்த கௌரவம் கிடைத்தது.
சொல்லப்போனால் 1995ல் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக சிறந்த ஆசிய படத்துக்கான விருது பிரிவு துவக்கப்பட்டிருந்த நிலையில் 1994ல் வெளியான மம்முட்டியின் 'விதேயன்' இந்த விருதை முதல் படமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.