விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கிறார்கள். தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துள்ளார் சிவா.
இன்னொரு பக்கம், விஸ்வாசம் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ரூபனை படத்தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில், விஸ்வாசம் படத்திற்கான ஸ்டன்ட் இயக்குனராக அனல் அரசுவை கமிட் பண்ணியுள்ளார்.
அஜித் நடிக்கும் படங்களுக்கு வழக்கமாக சில்வியா மாஸ்டர் தான் பணிபுரிவார். விவேகம் படத்திலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக, விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா, கத்தி, மெர்சல் முதலான படங்களில் ஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த அனல் அரசு விஸ்வாசம் படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அஜித் நடிக்கும் படத்திற்கு அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிவது இது தான் முதல் முறை.