குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அதன்பிறகு பூஜாவுக்கு தமிழில் படமில்லை. ஆனால் இந்தி, தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். அல்லு அர்ஜூனுடன் துவ்வாத ஜாகன்னாதம், பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாசுடன் சாக்சியம் ஆகிய படங்களில் நடித்தவர் அடுத்தபடியாக மகேஷ்பாபுவின 25-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் - சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடுகிறார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு அதிரடியான நாட்டுப்புற பாடல் உள்ளது. இந்த பாடலுக்காக நேற்று முதல் ராம்சரணுடன் இணைந்து நடனமாடிக்கொண்டிருக்கிறார் பூஜாஹெக்டே. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார்.