இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க, வில்லனாக நீல்நிதின் முகேஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்த நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சில வெளிநாடுகளில் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் 60 நாட்களுக்கு மேல் நடக்கும் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
அந்த காட்சிகளில் நடிக்க பிரபாஸ் மற்றும் நீல்நிதின்முகேஷ்க்கு ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் சண்டை பயிற்சி கொடுக்கிறார். மேலும், 2019ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சாஹோ படத்தை உலகதரத்தில் வெளியிடுகிறார்கள். அதன்காரணமாக, விஎப்எக்ஸ் பணிகளுக்காக மட்டுமே நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்களாம்.