Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜூ முருகன், ஜீவா கூட்டணியில் உருவாகும் ஜிப்ஸி

06 பிப், 2018 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Raju-Murugan-to-Direct-Jeeva

பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ராஜூ முருகன். அவர் இயக்கிய குக்கூ, மற்றும் ஜோக்கர் படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றன. ஜோக்கர் படம் தேசிய விருதும் பெற்றது. ஜோக்கர் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டிருந்த ராஜூ ருகன் தற்போது இயக்க இருக்கும் படம் ஜிப்ஸி.

இந்தப்படம் இந்தியா முழுவதும் பயணிக்கிற ஒரு பயணக்கதை. இந்தப்படத்தின் கதையை எழுதுவதற்கு ராஜூ முருகன் இந்தியா முழுவதும் காரிலேயே பயணம் செய்தார். அப்போது படப்பிடிப்புக்கான இடங்களையும் பார்த்து வந்து விட்டார். தற்போது இந்தப் படத்தில் நடிக்க ஜீவா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தேசிங்கு ராஜா, மனம்கொத்தி பறவை படங்களை தயாரித்த ஓலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். குக்கூ, ஜோக்கர் படங்களை போன்றே இதுவும் நல்ல கருத்துக்கள் நிறைந்த சமூக விழிப்புணர்வு படம் தான். என்றாலும் இதனை இன்னும் கூடுதலான கமர்ஷியல் அம்சங்களுடன் படமாக்க இருக்கிறார் ராஜூ முருகன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
துல்கர் சல்மானின் 25வது படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்துல்கர் சல்மானின் 25வது படம் கண்ணும் ... அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த அனுஷ்கா அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in