பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் 2014-ல் இயக்கிய படம் கோலிசோடா. புதுமுகங்களை வைத்து கைக்கு அடக்கமான சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோலிசோடா மிகப் பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இந்த படத்துக்குப் பிறகு பத்து எண்றதுக்குள்ள என்ற மிகப்பெரிய தோல்விப்படத்தைக் கொடுத்த விஜய்மில்டன் அடுத்து கடுகு என்ற படத்தை இயக்கினார். அதுவும் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் தற்போது கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் மில்டன். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விட்டது என்றும், இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
'கோலிசோடா-2'வின் பர்ஸ்ட் லுக்கை சென்ற ஜனவரி 1-ஆம் தேதி நடிகர் கார்த்தி வெளியிட்டார். இந்த படத்தின் டிரைலரை காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 'கோலிசோடா-2' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. அனைத்து விவரங்களையும் இந்த படத்தின் டிரைலரில் அறிவிக்க உள்ளனர்.