டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் வேதம், சபாஷ், கண்ணன் வருவான் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சமயத்திலேயே அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதீர் என்பவரை கடந்த 2002-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். இவர்களுக்கு அர்ஜூன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உண்டு.
திருமணத்திற்குப்பின் அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் டெக்சாஸ், ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் நடனப்பள்ளிகளை துவங்கி நடத்தி வந்தார்.. இந்தநிலையில் கடந்த 2௦16ஆம் வருடம் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் திவ்யா உன்னி.
திவ்யா உன்னி தொடர்ந்து நடனப்பள்ளிகள் திறப்பதில் ஆர்வம் காட்டுவது அவரது கணவர் சுதீருக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.. நடனத்தை விட்டுவிடும்படி தொடர்ந்து வற்புறுத்தியதால் தான் விவகாரத்து முடிவுக்கு தள்ளப்பட்டாராம் திவ்யா உன்னி.
இந்தநிலையில் மும்பையை சேர்ந்த கேரள இளைஞரான அருண்குமார் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்துள்ளார் திவ்யா உன்னி. இன்ஜினீயரான அருண்குமார், ஹூஸ்டனில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது திருமணம் நேற்று ஹூஸ்டனில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் நடைபெற்றது.