'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1991ம் ஆண்டு வெளிவந்த படம் ஈரமான ரோஜாவே. தயாரிப்பளார் கேயார் இயக்கிய படம். இதில் சிவா, மோகினி என்ற இரண்டு புதுமுகங்கள் அறிமுகமானார்கள். அதன் பிறகு இருவரும் பல படங்களில் நடித்தார்கள். பின்னர் அவர்களை சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சிவா துலாம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையில் சிவா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படத்தை வி.மூவீஸ் சார்பில் விஜய் விக்காஷ் தயாரித்துள்ளார். ராஜ நாகஜோதி இயக்கி உள்ளார். நிவாத், டெப்லினா என்ற புதுமுகங்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, மோனா பிந்ரே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அலெக்ஸ் பிரேம் நாத் இசை அமைத்திருக்கிறார், கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.