Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரங்கஸ்தலம் படத்தில் நடித்து முடித்தார் சமந்தா

04 பிப், 2018 - 13:50 IST
எழுத்தின் அளவு:
samantha-completes-rangasthalam-shooting

ராம்சரண்தேஜாவுடன் சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் 1980 -களில் நடக்கும் கதையில் உருவாகியிருப்பதால், அந்த காலகட்டத்து பெண்ணாகவே தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளார் சமந்தா. அவர் கிராமத்து கெட்டப்பில் சில மாடுகளை இழுத்துச் செல்லும் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகியது. அதையடுத்து, இந்த படத்தில் சமந்தா நடித்துள்ள வித்தியாசமான கெட்டப் குறித்து அறிய ஆவலாக இருப்பதாக அவரது ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆனால் ரங்கஸ்தலம் படத்தின் டீசர் வெளியானபோது அதில் சமந்தா இடம்பெறவில்லை. முழுக்க முழுக்க படநாயகன் ராம்சரணே இடம்பெற்றிருந்தார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பெருத்த அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து சமந்தா மட்டுமே இடம்பெறும் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகயிருப்பதாக அப்பட இயக்குனர் சுகுமார் தற்போது அறிவித்துள்ளார். இந்த ரங்கஸ்தலம் படம் மார்ச் 30-ந்தேதி திரைக்கு வருகிறது.


மேலும், தற்போது பல படங்களில் நடித்து வரும் சமந்தா, ரங்கஸ்தலம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துக்கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in