டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அண்மைக்காலமாக விக்ரம் பிரபு, நடித்த படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. ஆனாலும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'பக்கா', 'துப்பாகி முனை' ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, இவற்றில் துப்பாக்கிமுனை படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.
கலைப்புலி தாணு தயாரித்த காக்க காக்க படத்தைப் போல் துப்பாக்கி முனை தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். 'பக்கா', 'துப்பாகி முனை' படங்களை அடுத்து 'அசுரகுரு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம் பிரபு.
'அஞ்சனவித்தை' என்ற குறும்படத்தை இயக்கி தமிழக அரசின் விருது பெற்ற அ.ராஜ்தீப் இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.
அசுரகுரு அதிரடியான ஒரு திகில் படமாம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. யோகி' பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர்.