ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் கார்த்தியுடன் சாயிஷா செய்கல், பிரியா பவானிசங்கர், சத்யராஜ், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். டி. இமான் இசையமைக்கிறார். எப்போதுமே தனது படங்களில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாண்டிராஜ், இந்த படத்திலும் படம் முழுக்க கார்த்தியுடன் பயணிக்கும் காமெடி வேடம் கொடுத்துள்ளார்.
கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில், கார்த்தி குடும்பத்தின் கடைசி பையனாம். அதனால்தான் படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயர் வைத்துள்ளார் பாண்டிராஜ். அதோடு, கதைப்படி கார்த்திக்கிற்கு ஐந்து அக்கா கேரக்டர்கள் உள்ளதாம். அதனால் அவருக்கு பெற்றோர் மட்டுமின்றி, ஐந்து அக்காவும் அளவு கடந்த பாசம் காட்டுவார்களாம். அந்த வகையில், இந்த படத்தில் கார்த்திக் மீது அக்காக்கள் காட்டும் பாசத்தை மையமாக வைத்து ஒரு செண்டிமென்ட் பாடலும் உள்ளது என்கிறார்கள்.