தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷா நடிகையாகி 15 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போதுதான் அவர் முதன்முதலாக ஹே ஜூட் என்றொரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார். ஷ்யாம பிரசாத் இயக்கியுள்ள அந்த படத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ந்தேதியான நேற்று திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், த்ரிஷா விடுத்துள்ள ஒரு செய்தியில், ஹே ஜூட் படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குனர் ஷ்யாம பிரசாத் என்னிடம் படிக்க தந்தபோது இம்ப்ரஸாகி விட்டேன். அந்த அளவுக்கு திரைக்கதை பிரமாதமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றியது கமல் சார், மணிரத்னம் சார் படங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொடுத்தது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு ராணி போன்று கவனித்துக் கொண்டார்கள். அதனால் எதிர்காலத்தில் நிறைய மலையாள படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் த்ரிஷா.