ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தற்போது தமிழில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். அந்த அளவுக்கு அவர் காட்டில் அடமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளில் தயாராவதால், விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சைரா நரசிம்மரெட்டி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதில், விஜய்சேதுபதி, சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். தனது படங்களின் தெலுங்கு புரொமோஷன்களில் தெலுங்கில் சரளாக பேசி அசத்தியுள்ள விஜய் சேதுபதி, தற்போது தான் நடித்து வெளியாகியுள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலும் பல காட்சிகளில் தெலுங்கில் பேசி நடித்துள்ளார். இதையடுத்து, சிரஞ்சீவியுடன் நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டியிலும் தனக்குத்தானே தெலுங்கில் டப்பிங் பேச முடிவு செய்துள்ளாராம்.