'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அனுஷ்காவுக்கு ரஜினி, கமலுடன் நடிக்கும் வாய்ப்பும் மட்டும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் அந்த வாய்ப்பினை பெற்றார் அனுஷ்கா. அதன்பிறகு அவருக்கு மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், தற்போது அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ரஜினியும் பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அனுஷ்காவுக்கு போன் செய்து படத்தையும், அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. இந்த தகவலை வெளியிட்டுள்ள அனுஷ்கா, ரஜினியிடமிருந்து பாகமதி படத்திற்கு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த வகையில், பாகமதி படத்திற்கு எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தபோதும், ரஜினியின் இந்த பாராட்டை சிறந்த பாராட்டாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.