Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரோஜாவை வைத்து ஆபாச படம் : இயக்குனர் பேச்சால் சர்ச்சை

02 பிப், 2018 - 13:43 IST
எழுத்தின் அளவு:
telugu-director-spoke-controversy-about-actress-roja

நடிகையும் ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினருமான ரோஜா நடிப்பில் ஆபாச படம் எடுக்கத் தயார் என்று தெலுங்கு இயக்குனர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு பட இயக்குனர் அஜய் கவுன்டியா. இவர் தற்போது என் எச் 47 பூத் பங்களா என்ற படத்தை இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் அஜய் கவுன்டியா பேசியதாவது:


நடிகை ரோஜா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் அடிப்படையில் சினிமாவைச் சேர்ந்தவர். சினிமா நடிகை. ஆனால் ரோஜா சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். பல பிரச்சினைகளை பற்றி பேசி வரும் அவர் சினிமா வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. சினிமா தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அந்த பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை.


அவர் மீண்டும் நடிக்க வந்து விடலாம். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் இயக்குகிறேன். அதில் ரோஜா நடிக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் படத்தில் பிரபல நீலப்பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குனர் அஜய் கவுன்டியாவின் இந்தப் பேச்சு ஆந்திர சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பெண்கள் அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அஜய் கவுன்டியா மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in