இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய நடிகைகளில் ஹீரோக்களுக்கு இணையான வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பதில் வல்லவர் அனுஷ்கா. அவரது சிறந்த நடிப்புக்கு அருந்ததி, பாகுபலி, ராணி ருத்ரம்மா தேவி என பல படங்கள் அமைந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் பாகமதியும் சேர்ந்துள்ளது. இந்த படத்திற்கு வழக்கமான ஹாரர் படம்தான் என்கிற விமர்சனங்கள் எழுந்தபோதும் வசூல்ரீதியாக படம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, ஆந்திராவில் மட்டும் 10 கோடி வசூலித்துள்ளது பாகமதி.
மேலும், பாகமதி படத்தை பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் அனுஷ்காவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ராம்சரணும் பாகமதி படத்தை ஐதராபாத்திலுள்ள ஒரு தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்துள்ளார். படம் பற்றி ராம் சரண் கூறுகையில், ரங்கஸ் தலம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலும் பாகமதி படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அனுஷ்காவின் நடிப்பு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. டெக்னிக்கல் ரீதியாகவும் மிரட்டியிருக்கிறார்கள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.