ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு பிறகு குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த ஜோதிகா, பாலாவின் நாச்சியார் படத்தில் திடீரென்று அதிரடி நாயகியாக உருவெடுத்துள்ளார். போலீஸ் வேடத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மிரட்டலாக நடித்திருக்கிறார். குறிப்பாக, அப்படத்தின் டிரெய்லரில் அவர் பேசியிருந்த " தே" என்ற வார்த்தை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து தற்போது அந்த படம் குறித்து ஜோதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாச்சியார் படத்தில் நான் பேசிய, அந்த வார்த்தையை பல படங்களில் நடிகர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் பெருசுபடுத்தவில்லை. ஒரு நடிகை பேசியதால் இப்போது சர்ச்சையாக்கி விவாதம் செய்து வருகிறார்கள்.
மேலும், கதைப்படி பார்க்கப்போனால், நாச்சியார் படத்தில் நான் நடித்துள்ள கேரக்டர் அதுபோன்று இன்னும் நிறைய வார்த்தைகளை பேசியிருக்க வேண்டும். அப்படித்தான் கதையும், கதாபாத்திரமும் அமைந்துள்ளது. ஆனால் நான்தான், குறைத்து பேசியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோதிகா.