Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் 63வது படம் யாருக்கு ?

01 பிப், 2018 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Who-will-going-to-make-vijays-63the-film?

மெர்சல் படத்திற்குப் பிறகு விஜய்யின் இமேஜும், மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. அவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் கடுமையான போட்டி எழுந்துள்ளது. விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62வது படம். இந்தப் படத்தையடுத்து விஜய்யின் 63வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள், தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்து திரையுலகில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்து, அவருக்கு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் அடுத்து விஜய் நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படம் வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது.

மற்றொரு தகவலாக மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காகத்தான் விஜய் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். மெர்சல் படம் வெளிவந்து 200 கோடியைக் கடந்தாலும் படத்தின் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலையும், சோதனைகளையும் பட வெளியீட்டின் போது சந்தித்தார்கள். அதை அவர்கள் சமாளித்து படத்தைக் காப்பாற்றியதால் அவர்களுக்காக நடிப்பதுதான் சரி என விஜய் நினைக்கிறாராம்.

தற்போது புதிய தகவலாக விஜய் நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தைத் தயாரித்த சீனியர் தயாரிப்பாளரான சங்கிலி முருகன் தயாரிப்பில் விஜய் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சு பரவியுள்ளது. இந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்க உள்ளாராம்.

விஜய்யை சமீபத்தில் இயக்குனர்கள் மோகன்ராஜா, வினோத் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தெறி, மெர்சல் என இரண்டு ஹிட்டுகளைக் கொடுத்தால் அட்லீயும் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். இந்த மூவரில் யாருக்கு விஜய் 63 கிடைக்கப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in