Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷா துப்பறியும் "குற்றப்பயிற்சி"

01 பிப், 2018 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Trishas-next-movie-Kuttrappayirchi

கடந்தாண்டு த்ரிஷா நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், இந்தாண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக அநேகமாக த்ரிஷா தான் இருப்பார் போல. அவர் நடித்த பல படங்கள் வரிசையாக ரிலீஸாக உள்ளன.

இந்நிலையில் அடுத்தப்படியாக "குற்றப்பயிற்சி" என்ற படத்தில் நடிக்கிறார். பாலாவிடம் உதவியாளராக இருந்த வர்ணிக் இப்படம் மூலம் இயக்குநராகிறார். த்ரிஷாவுடன் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

1980-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் த்ரிஷா, பெண் துப்பறிவாளராக நடிக்கிறார். இதுவரை த்ரிஷா நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம் இது.

ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார். ரதன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Advertisement
மணிரத்னம் படத்திற்காக எடை குறைக்கும் சிம்புமணிரத்னம் படத்திற்காக எடை ... புதுச்சேரியில் துவங்கியது ஜீவாவின் கொரில்லா புதுச்சேரியில் துவங்கியது ஜீவாவின் ...


வாசகர் கருத்து (1)

01 பிப், 2018 - 19:09 Report Abuse
ஜான் வாழ்த்துக்கள். என்றுமே இளமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in