பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் படுதோல்வியடைந்த நிலையில், அந்த படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து சிம்புவிற்கு ரெட்கார்டு நடவடிக்கை எடுக்கயிருப்பதாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. இருப்பினும் சிம்புவை தனது புதிய மல்டி ஸ்டார் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். இந்த படத்தில் சிம்புவுடன் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான ரிகர்சல் நடைபெற்றபோது கலந்து கொண்ட சிம்பு, விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதோடு இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை கணிசமான அளவு குறைக்கிறார். அதற்காக தற்போது ஜிம்மில் முகாமிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சிம்பு. அந்த வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.