ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் ஹீரோ - காமெடியன் கூட்டணியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எப்போதுமே நிவின்பாலி-அஜூ வர்கீஸ் இருவரின் கூட்டணிதான். மலையாள சினிமாவில் ஒரே படத்தில் அறிமுகமான இவர்கள் தட்டத்தின் மறயத்து, ஓம் சாந்தி ஒசானா, ஒரு வடக்கன் செல்பி உட்பட சில படங்களில் தங்களது காமெடியால் களைகட்ட வைத்தனர்.
ஆனால் 'ஒரு வடக்கன் செல்பி' படத்தை தொடர்ந்து கடந்த 3 வருடங்களாக இந்த கூட்டணியின் காமெடி களேபரத்தை கண்டுகளிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. அந்தக்குறையை தீர்க்கும் விதமாக நீண்ட நாளைக்குப்பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள 'ஹே ஜூடு' படம் நாளை (பிப்-2) வெளியாகிறது.
இந்தப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் என்பதும், மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.