பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமல் இருவரும் அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். ரஜினி, மக்கள் மன்றம் துவங்கி ஒவ்வொரு பகுதியிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ரஜினி, தன் ரசிகர்களை சந்தித்த போது ரஜினி மக்கள் மன்றத்திற்கான லோகோவும் இடம் பெற்று இருந்தது. இதில், பாபா முத்திரையுடன், தாமரையும், பாம்பும் இடம் பெற்றிருந்தது. தாமரை இருந்ததால் ரஜினி, பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போன்று செய்தி பரவ, தாமரை நீக்கினார். தொடர்ந்து, தற்போது லோகோவில் உள்ள பாம்பையும் நீக்கி உள்ளார் ரஜினி.
பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு, ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் உள்ள பாம்பு போன்று இருப்பதாக தென்மாவட்ட ரசிகர்கள் கூறியதால் அதை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.