Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகுவரன் இசையமைத்துப் பாடிய பாடல்களை வெளியிட்ட ரஜினிகாந்த்

01 பிப், 2018 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Rajini-released-Raghuvaran-composed-songs

நடிகர் ரகுவரன், தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத ஒரு நடிகர். 1982ம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தாலும், வில்லனாக நடிக்க ஆரம்பித்த பின் அனைத்து ரசிகர்களிடத்திலும் சென்று சேர்ந்தார்.

“மிஸ்டர் பாரத், மனிதன், பூவிழி வாசலிலே, அஞ்சலி, பாட்ஷா, அருணாச்சலம்” என அவர் நடித்த பல படங்களைப் பற்றியும், அவரது கதாபாத்திரங்களைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். உடல்நலக் குறைவு காரணமா பத்து வருடங்களுக்கு முன்பு 2008ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

ரகுவரன் சிறந்த இசைக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர். இசை மீது அவருக்குள்ள ஆர்வத்தால் அவர் 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துப் பாடி வைத்துள்ளார். அவற்றை ரகுவரனின் மனைவி நடிகை ரோகிணி, மகன் ரிஷிவரன் ஒரு இசை ஆல்பமாகத் தொகுத்துள்ளார்கள்.

ரகுவரன் - எ மியூசிக்கல் ஜர்னி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் 5 பாடல்களும், ஒரு தீம் மியுசிக்கும் இடம் பெற்றுள்ளது.

ரகுவரனுக்குள் இப்படி ஒரு இசைத் திறமை இருந்துள்ளது என்பது அந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். ஒரு சிறந்த கலைஞரை தமிழ் சினிமா சீக்கிரமே இழந்துவிட்டது.

RAGHUVARAN - A Musical Journey - Link : https://youtu.be/NaFf03IIZ9g

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in