'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள மூன்றாவது படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. முதலில் ஜனவரி 25-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை யடுத்து கிராபிக்ஸ் வேலைகள் தாமதமாவதாக சொல்லி ஏப்ரல் மாதம் வெளியாகயிருப்பதாக சொன்னார்கள்.
ஆனால், இப்போது 2.ஓ படத்தின் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதத்திற்கு ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை டைரக்டர் ஷங்கர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றபோதும், இந்த செய்தியை அப்படக்குழு இதுவரை மறுக்கவில்லை.