‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அண்ணாத்துரை படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் காளி. இதனை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுதாத், அம்ரிதா நடிக்கிறார்கள். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதனன், உள்பட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.
இதேபோன்று புதுமுகங்கள் நடிப்பில் காட்டுப்பய சார் இந்த காளி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். ஜெய்வந்த், ஜாரா, ஆடுகளம் நரேன், சி.வி.குமார், அபிஷேக் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் சங்கர் இசை அமைக்கிறார், மண் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் யுரேகா இயக்குகிறார். இதுவும் அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுது போக்கு படமாக உருவாகி வருகிறது.