இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜாலி எல்.எல்.பி'. படத்தின் ரீ-மேக்காக உதயநிதி நடித்த மனிதன் படத்தை இயக்கியவர் அஹமத். 'மனிதன்' படத்தை அடுத்து 'ஜெயம்' ரவியை வைத்து ஒரு படத்தை அஹமத் இயக்கவிருக்கிறார்.
இந்த படம் அக்ஷ்ய்குமார் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'பேபி' படத்தின் ரீ-மேக் என்று தகவல் வெளியானது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அடுத்து இயக்கும் படம் ஹிந்தி 'பேபி'யின் ரீ-மேக் இல்லை, வேறு கதை என்று மறுத்திருக்கிறார் அஹமத். ஆனால் இந்த படத்தில் 'ஜெயம்' ரவிதான் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை மட்டும் இயக்குனர் அஹமத் மறுக்கவில்லை.
அது சரி... பேபி ரீமேக் என்ற செய்திய பரவியது எப்படி? ஜெயம்ரவியிடம் அஹமது சொன்ன கதையில் பேபி படத்தின் சாயல் இருப்பதால் இப்படியொரு தகவல் பரவிவிட்டதாம். இதற்கிடையில் பேபி படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்க முயற்சி செய்துள்ளனர். பெரிய விலை சொன்னதால் பின்வாங்கிவிட்டனர் என்று கூறப்படுகிறது.