ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி தற்போது அங்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதிர்வலைகளை ஏற்படுத்திய 'ஷட்டர்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜாய் மேத்யூ எழுதியுள்ள கதை இது. கிரீஷ் தாமோதர் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தில் ஆஷா சரத், கார்த்திகா முரளிதரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் ஜாய் மேத்யூவின் நட்புக்காக மம்முட்டி அட்வான்ஸ் எதுவுமே வாங்காமல் நடித்து வந்தாராம். ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்பாக இந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை நல்ல விலைக்கு விற்றுவிட்டாராம் நடிகரும் கதாசிரியருமான ஜாய் மேத்யூ. அதை வைத்து மம்முட்டிக்கு சம்பளம் செட்டில் செய்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஜாய் மேத்யூ.
இவரது முந்தைய படமான 'ஷட்டர்' தமிழில் 'ஒருநாள் இரவில்' என்கிற பெயரில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.