மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவருக்குமே தங்களது லட்சியம் என்பது சினிமாவாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, கனவுகள் இருந்திருக்கும். சிலர் ஆசைப்பட்டே சினிமாவுக்கு வந்திருப்பார்கள். இன்னும் சிலரோ, வேறு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையில் சினிமாவுக்கு வந்திருப்பார்கள்.
அந்தவகையில், விண்வெளி சென்று வந்த முதல் இந்திய பெண்மணியான கல்பனா சாவ்லாவைப் போன்று தானும் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது தான் காஜல்அகர்வாலின் சிறு வயது கனவாக இருந்திருக்கிறது. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை சினிமா பக்கம் திருப்பி விட்டிருக்கிறது.
இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள காஜல் அகர்வால், ஒரு படத்திலாவது விண்வெளி வீராங்கனையாக நடிக்க வேண்டும் என்பது எனது தற்போதைய கனவாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.