ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிப்பில் 2.ஓ படத்தை தற்போது இயக்கியிருக்கிறார் ஷங்கர். ஏப்ரல் மாதம் வெளியாகயிருக்கும் அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்குகிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் விதமாக தைவானில் இந்தியன் 2 சிறிய ரக பலூன் பறக்கவிட்டார் ஷங்கர்.
இந்தியன்-2 படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. கமல் இதுவரை நடித்த படங்களில் இது அதிக பட்ஜெட் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை நயன்தாரா சம்மதித்தால், கமலுடன் முதன் முறையாக இணையும் படம் இந்தியன் 2-வாக இருக்கும்.
இப்படத்தில் நயன்தாராவுக்கு ஒரு புரட்சி பெண் வேடம் என்கிறார்கள். அவர் மட்டுமின்றி, வடிவேலுவும் இந்தியன்-2வில் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.