இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார் என கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் இருந்தன. எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் நிறைவான வெற்றியைப் பெற்றுள்ளது என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்பது போகப் போகத்தான் தெரியும்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது அவருடைய நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத்துடன் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற கடற்கரை நகரமான மியாமி நகரத்தில் டிஸ்கஷன் செய்து வருகிறார். இது பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
“மியாமியில் ஒரு வாரமாக இருக்கிறோம். என்னுடைய பலத்திற்குத் தூணாக இருக்கும் அனிருத்துடன் மற்றொரு பயணத்திற்காகக் காத்திருக்கிறேன். அடுத்த படத்திற்கான புதிதான விஷயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சுவாரசியமான தகல்வகளை விரைவில் தெரிவிக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.