பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
எம்.ஜி.ஆர், இரு வேடங்களில் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டு பிள்ளை. 1965-ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, ரத்னா, பண்டரிபாய் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளிவந்த ராம பீமடு படத்தின் ரீமேக் ஆகும்.
தெலுங்கில் இயக்கிய சாணக்யாவே தமிழிலும் இயக்கினார். மிகச்சரியான 100 சதவிகித பொழுது போக்கு படத்திற்கு இந்தப் படத்தையே உதாரணம் காட்டுவார்கள். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.நாகிரெட்டி தயாரித்திருந்தார்.
தற்போது இந்தப் படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நவீன டால்வி ஒலி அமைப்பு, சினிமாஸ்கோப் போன்ற மாற்றத்துடன் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். பிலிம் விஷன் நிறுவனத்தின் சார்பில் கே.ராமு வெளியிடுகிறார். வருகிற பிப்ரவரி 2ந் தேதி வெளியிடப்படுகிறது.