ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ஸ்ரத்தா கபூர், ஸ்டிரீ என்ற காமெடி கலந்த பேய் படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் விஜன், இப்படத்தில் ஸ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தது ஏன் என்ற காரணத்தை வெளியிட்டுள்ளார்.
தினேஷ் விஜன் பேசுகையில், நான் ஸ்ரத்தா கபூரை விமான பயணத்தின் போது தான் சந்தித்தேன். அவரிடம் ஏதோ தனித்துவம் உள்ளதாக உணர்ந்தேன். அந்த உணர்வை எனக்கு விளக்க தெரியவில்லை. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஸ்ரத்தா தான் பொருத்தமாக இருப்பார் என நம்பினேன். அதனாலேயே அவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன் என்றார்.
அமர் கவுசிக் இயக்கும் ஸ்டிரீ படத்தை தினேஷ் விஜன் தயாரிக்கிறார். இப்படத்தில் ராஜ்குமார் ராவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.