'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு கையில் அதிகப் படங்களை வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. அவர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்து முடித்து சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 'இடம் பொருள் ஏவல்' விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தற்போது “96, சூப்பர் டீலக்ஸ், ஜுங்கா” ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். அந்தப் படங்களுடன் தமிழில் 'சீதக்காதி' படத்திலும், மணிரத்னம் இயக்க உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் அடுத்து நடிக்க உள்ள 'மாமனிதன்' படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படங்களையும் சேர்த்தால் விஜய் சேதுபதி கைவசம் படப்பிடிப்பில் 6 படங்கள் உள்ளன.
தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்க உள்ளார். இவையில்லாமல் பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் விஜய் சேதுபதியிடம் தொடர்ந்து கதை சொல்லி வருகிறார்களாம். 2019 வரை விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
மேடைக்கு மேடை விழாக்களில் பல பொதுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் விஜய் சேதுபதிதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கம் ஒரே நடிகர்.