‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா என்ற படத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். பாலா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறது. அதற்காக கடந்த சில மாதங்களாகவே நடனம், நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம்.
இந்தநிலையில் அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தில் நடித்து முடித்தும் சில ஆண்டுகள் துருவ் நடிப்புக்கு பிரேக் கொடுப்பார் என்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் விக்ரம். காரணம், தற்போது வெளிநாட்டில் படித்து வரும் துருவ், உயர்கல்வியை முடிக்க சில ஆண்டுகள் ஆகுமாம். அதனால் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கான வர்மா படத்தில் நடித்து முடித்த தும் சில ஆண்டுகள் படிப்பை தொடர வெளிநாடு செல்கிறாராம். அதன்காரணமாக, மீண்டும் அவர் நடிக்க வருவதற்கு சில வருடங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார் விக்ரம்.