Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் : மாதவன்

27 ஜன, 2018 - 18:33 IST
எழுத்தின் அளவு:
I-believe-in-quality-work-over-the-quantity-work---R-Madhavan

நடிகர் மாதவன் முதன்முறையாக வெப் சிரீஸில் நடித்திருக்கிறார். ப்ரீத் என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த சீரிஸ் நேற்று வெளியாகி உள்ளது. வெப்சிரீஸ் அனுபவம் குறித்தும், தன் சினிமா பயணம் குறித்தும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...

வெப் சிரீஸில் நடிக்க என்ன காரணம்?
வெப் சரீஸ் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்பே தெரியும். வரும் காலங்களில் இது தான் பெரிய அளவில் ஹிட்டாக போகிறது. இதுபோன்ற வெப் சிரீஸ் மூலம் ஹாலிவுட் நடிகர்களும் பிரபலமாகி உள்ளார்கள். எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணவில்லை. முதலில் இந்த வாய்ப்பு வந்தபோது நடிக்க மறுத்தேன், அதன்பின்னர் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா இதை தயாரிக்கிறார் என்று சொன்னதும் கதையை கேட்க ஆரம்பித்தேன். இயக்குநர் மயாங் சர்மா, கதையை என்னிடம் விளக்கினார். மிகவும் பிடித்திருந்தது, நடிக்க சம்மதம் சொன்னேன்.

உடல் உறுப்பு தானத்தை பற்றி வலியுறுத்தும் வெப் சிரீஸ் இது, அது பற்றி உங்களுக்கு தெரியுமா?
உடல் உறுப்பு தானத்தை பற்றி நான் நன்கு அறிவேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே, நான் உடல் உறுப்பு தானம் செய்துள்ளேன். இது நல்ல விஷயம். மனிதர்கள் இறந்த பின்னர், அவர்களின் உடல் உறுப்புகள், பலருக்கு வாழ்வை தரக்கூடியது. இதையெல்லாம் ப்ரீத்தில் சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா, பிரான்ஸில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டிரைலரில் உங்க கேரக்டர் பாசிட்டிவ் - நெகட்டிவ் கலந்து உள்ளதே, எது உண்மை?
அதை நான் சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பாசிட்டிவ், நெகட்டிவ் கலந்து தான் உள்ளது. எங்களது வெப் சிரீஸிலும் அப்படியே சொல்லியிருக்கிறோம். ஹீரோ பாசிட்டிவ்வான மனிதர், ஆனால் குடும்ப சூழலால் அவன் நெகட்டிவ்வான விஷயங்களுக்கு தள்ளப்படுகிறார். அது சட்டத்திற்கு எதிராகவும் அமைகிறது. ஒரு மனிதனின் வாழ்விலோ, அல்லது உறவினர் வழியிலோ இக்கட்டான சூழல் நிலவினால் அந்த சமயம் அவர்கள் செய்யும் செயல் நல்லதா, கெட்டதா என்றே தெரியாது.

ஒரு படத்தில் நடிக்க உங்களை எப்படி தயார் செய்வீர்கள்?
முதலில் படத்தின் கதையை கேட்பேன். அடுத்து எனது கேரக்டர் எப்படிப்பட்டது, கதையோடு அது எப்படி தொடர்புபடுத்தி உள்ளது என்று பார்ப்பேன். பிறகு யாருடன் நடிக்க போகிறேன், யார் தயாரிக்கிறார்கள் என பார்ப்பேன். கடைசியாக எனக்கான சம்பவளம் சரியாக வருமா என்று பார்ப்பேன். இவை எல்லாம் இருந்தாலும், கதை மற்றும் என் கேரக்டருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

குறிப்பிட்டு சில படங்களில் தான் நடிக்கிறீர்கள், இது ஆபத்தில்லையா?
அப்படி நான் கருதவில்லை. சினிமாவில் நான் அறிமுகமான போது, உங்களின் நட்சத்திர அந்தஸ்த்தை கவினித்து கொள்ளுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் எயிட் பேக் பாடியெல்லாம் வைக்கவில்லை, நன்றாக நடனம் ஆடுபவனும் இல்லை. இருந்தாலும் எனக்கான வாய்ப்புகள் வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 11 படங்களில் தான் நடித்திருக்கிறேன். மூன்றாண்டுகளில் 7 படம் தான் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தமட்டில் படங்களின் எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் என கருதுகிறேன். சினிமாவில் தற்போது நான் இருக்கும் நிலையே மகிழ்ச்சி அளிக்கிறது.

வெப் சிரீஸில் பாக்ஸ் ஆபிஸ் பிரச்னை உண்டா?
இதில் அப்படியொரு பிரச்னை இல்லை. வெப் சிரீஸ் ரிசல்ட் உடனே தெரியாது, சிறிது காலம் கழித்து தான் தெரியும். ஆனால் படங்களின் வெளியீட்டின் போது பாக்ஸ் ஆபிஸ் கவலை என்னை தொற்றிக்கொள்ளும்.

இவ்வாறு மாதவன் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in